இந்தியாவின் பிப்ரவரி மாத சரக்குப் பொருட்கள் வர்த்தகப் பற்றாக்குறையானது மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 14.05 பில்லியன் டாலராகக் குறைந்து உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் சுமார் 5 பில்லியன் டாலர் அளவில் சிறிய உபரியும் பதிவானது.
முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது ஏற்றுமதியானது சுமார் 11% குறைந்து 36.91 பில்லியன் டாலராகவும், இறக்குமதியானது சுமார் 16% குறைந்து 50.96 பில்லியன் டாலராகவும் உள்ளது.