2020-21 ஆம் ஆண்டில் 102.63 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையானது 87.5 சதவீதம் அதிகரித்து 2021-22 ஆம் ஆண்டில் 192.41 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதியின் மதிப்பானது 417.81 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவைத் தொட்டது.
அதே காலகட்டத்தில் இறக்குமதியின் மதிப்பும் 610.22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவினைத் தொட்டது.
இவ்வகையில் இது 192.41 பில்லியன் டாலர் வர்த்தக இடைவெளியை ஏற்படுத்தியது.