TNPSC Thervupettagam

இந்தியாவின் வறுமை குறித்த SBI அறிக்கை

January 11 , 2025 2 days 43 0
  • 2023–24 ஆம் ஆண்டிற்கான மாதாந்திரத் தனிநபர் நுகர்வுச் செலவினம் (MPCE) ஆனது கிராமப்புறங்களில் 4,122 ரூபாயாகவும், நகர்ப்புறங்களில் 6,996 ரூபாயாகவும் உள்ளது.
  • அதாவது, தினசரி செலவினங்கள் முறையே 137 ரூபாய் மற்றும் 233 ரூபாயாக உள்ளது.
  • பாரத் ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சியானது, 2011-12 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட வறுமைக் கோட்டினை புதுப்பித்து கிராமப்புறங்களில் மாதத்திற்கு சுமார் 1,632 ரூபாய் ஆகவும், நகர்ப்புறங்களில் 1,944 ரூபாய் ஆகவும் 2023-24 ஆம் ஆண்டிற்கான, வறுமைக் கோட்டினை நிர்ணயித்துள்ளது.
  • இந்த வரம்புகளுக்குக் கீழே வருமான அளவுகளைக் கொண்ட நபர்கள் மிக ஏழ்மையில் உள்ளவர்களாக வகைப்படுத்தப் படுகிறார்கள்.
  • இதனுடன் ஒப்பிடச் செய்கையில், 2011-12 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட வறுமைக் கோடுகள் முறையே 816 ரூபாய் மற்றும் 1,000 ரூபாயாக இருந்தன.
  • இந்தப் புதிய வரம்பின் அடிப்படையில், கிராமப்புறங்களில் 27.4 சதவீதமும் நகர்ப்புற மக்களில் 23.7 சதவீதமும் ஏழ்மை நிலையில் உள்ளனர்.
  • ஒட்டு மொத்தமாக, நாட்டில், 26.4 சதவீத மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்