TNPSC Thervupettagam

இந்தியாவின் விலங்கினங்கள் சரிபார்ப்பு பட்டியல் தளம்

July 9 , 2024 9 days 112 0
  • 104,561 இனங்களை உள்ளடக்கிய தனது முழு விலங்கினங்களின் சரிபார்ப்புப் பட்டியலைத் தயாரித்த உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
  • இது உள்நாட்டு இனம், அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனம் மற்றும் பட்டியலிடப்பட்ட இனங்கள் ஆகியவற்றினை உள்ளடக்கிய சுமார் 36 தொகுதிகளில் (ஃபைலா) உள்ள அனைத்து அறியப் பட்ட வகைப் பாட்டியலின் 121 சரிபார்ப்புப் பட்டியல்களைக் கொண்டுள்ளது.
  • இது 1750 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விலங்கினங்களின் தொகுப்பாகும் என்பதோடு இதில் உள்நாட்டு இனம், அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனம் மற்றும் பட்டியலிடப்பட்ட இனங்கள் ஆகியவையும் அடங்கும்.
  • 2023 ஆம் ஆண்டு இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பின் அறிக்கையின்படி, உலகின் 17 பெரும் பல்வகைமை நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்ற நிலையில் இந்தியா உலகின் ஆவணப்படுத்தப்பட்ட உயிரினங்களில் 7% முதல் 8% இனங்களைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்