இந்தியாவின் வீட்டுவசதித் துறையில் நிலவியப் போக்குகள் 2024
March 19 , 2025 12 days 66 0
இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) ஆனது, 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் வீட்டுவசதி துறையில் நிலவியப் போக்குகள் மற்றும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
30-09-2024 ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்த தனிநபர் வீட்டுவசதிக் கடன்கள் 33.53 லட்சம் கோடி ரூபாயாகும்.
இது முந்தைய ஆண்டின் இதே காலக் கட்டத்தை விட 14% வளர்ச்சியைக் காட்டுகிறது.
இந்தக் கடன் விவரங்கள் ஆனது, பொருளாதார ரீதியாக நலிவடைந்தப் பிரிவினர் (EWS) மற்றும் குறைந்த வருமானக் குழுக்கள் (LIG) ஆகியோர் சுமார் 39% பங்களிப்பைக் கொண்டுள்ளதைக் காட்டுகின்றன.
இதில் நடுத்தர வருமானக் குழுக்கள் (MIG) 44% பங்கினையும், மேலும் உயர் வருமானக் குழுக்கள் (HIG) 17% பங்கினையும் கொண்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில் வீட்டு விலைக் குறியீடு (NHB-RESIDEX) ஆண்டிற்கு 6.8% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.