TNPSC Thervupettagam

இந்தியாவின் வெப்ப அலை மிகுந்த இடங்கள்

October 28 , 2023 267 days 272 0
  • பருவநிலை மாற்ற ஆராய்ச்சிக்கான மகாமனா மையத்தின் ஒரு ஆய்வில் இடைக்கால அளவில் (2041-2060) இந்தியாவில் ஏற்படும் வெப்ப அலை குறித்தப் பண்புகளின் எதிர் கால மாற்றங்களை ஆய்வு செய்தது.
  • இது, RCP 4.5 மற்றும் RCP 8.5 உமிழ்வுகளின் கீழ் முறையே நீண்ட கால (2081-2099) மற்றும் எதிர்கால மாற்றங்களை ஆய்வு செய்கிறது.
  • தென்-மத்தியப் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவிலான அதிகரிப்புடன் எதிர்கால வெப்ப அலை மிகைப் பகுதிகளாக வடமேற்கு, மத்திய மற்றும் தென்-மத்திய இந்தியா ஆகிய பகுதிகள் உருவாக்கியுள்ளன.
  • மனித நடவடிக்கைகளின் விளைவாக எதிர்காலத்தில் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுகள் எவ்வாறு மாறும் என்பதைப் பற்றிய எதிர்கால போக்குகளைக் கண்டறிவதற்காக சார்பு செறிவுப் பாதைகள் (RCP) பயன்படுத்தப் படுகின்றன.
  • RCP 4.5 சூழ்நிலையில், நூற்றாண்டின் நடுப்பகுதியில் உமிழ்வுகள் உச்சத்தை அடைந்து நூற்றாண்டின் இறுதியில் குறையும்.
  • RCP 8.5 என்பது நூற்றாண்டு முழுவதும் உமிழ்வுகள் அதிகரிக்கும் மிகவும் அதிகபட்ச அடிப்படை சூழ்நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்