TNPSC Thervupettagam

இந்தியாவின் வெளிக் கடன்

July 6 , 2020 1477 days 569 0
  • ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்தியாவின் வெளிக் கடன் 558.5 பில்லியன் டாலராக இருந்தது.
  • இது 2019 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 15.4 பில்லியன் டாலர் அல்லது 2.8% அதிகரிப்பு ஆகும்.
  • வெளிக் கடனின் மிகப்பெரிய கூறு 39.4% பங்கைக் கொண்ட வணிகக் கடனாகும்.
  • அதைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புநிதி 23.4% ஆகவும், குறுகிய கால வர்த்தக கடன் 18.2% ஆகவும் உள்ளது.
  • பணத்தைப் பொறுத்தவரையில், அமெரிக்க டாலர் மூலம் மதிப்பிடப்பட்ட கடன் 53.7% பங்கைக் கொண்ட ஒரு மிகப்பெரிய அங்கமாகத் தொடர்கிறது.
  • அதைத் தொடர்ந்து இந்திய ரூபாய் (31.9%), யென் (5.6%), சிறப்பு எடுப்பு உரிமைகள் (4.5%) மற்றும் யூரோ (3.5%) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்