நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் தொகையானது ஆண்டிற்கு 8.2 சதவீதம் அதிகரித்து 620.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அதில் 53.2 சதவீதம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
31.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ள இந்திய ரூபாய் மதிப்பிலானக் கடனானது இரண்டாவது பெரிய மதிப்பீடாக உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் விகிதம் 19.9 சதவீதமாக உள்ள நிலையில் வெளிநாட்டுக் கடன் மற்றும் கையிருப்பு விகிதம் 97.8 சதவீதமாக இருந்தது.
நீண்ட காலக் கடன் ஆனது மொத்த அளவில் 80.4% ஆக மொத்தம் 499.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
குறுகிய கால கடன் ஆனது மொத்த அளவில் 19.6% ஆக மொத்தமாக 121.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது, 2021-22 ஆம் ஆண்டில், சிறப்பு வரைவு உரிமைகள் (SDR) மூலம் கூடுதல் ஒதுக்கீடு செய்ததன் காரணமாக, அரசின் இறையாண்மைக் கடன் ஆண்டிற்கு 17.1% அதிகரித்து 130.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிக் கட்ட நிலவரப்படி அரசின் இறையாண்மை சாராதக் கடன் 6.1% அதிகரித்து 490.0 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
வணிகக் கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத் தொகைகள் மற்றும் குறுகிய கால வர்த்தகக் கடன் ஆகியவை மொத்த அளவில் 95.2 சதவீதம் வரை உள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத் தொகைகள் 2% குறைந்து 139.0 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ள நிலையில், வணிகக் கடன்கள் (209.71 பில்லியன் டாலர்கள்) மற்றும் குறுகிய கால வர்த்தகக் கடன் (117.4 பில்லியன் டாலர்கள்) ஆகியவை முறையே 5.7% மற்றும் 20.5% அதிகரித்துள்ளன.
முந்தைய ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த கடன் சேவை விகிதமானது 2021-22 ஆம் ஆண்டில் மிதமான நடப்பு வருவாய்கள் மற்றும் வெளிப்புறக் கடன் சேவை வழங்கீடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிடத் தக்க அளவில் 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.