இந்தியாவின் விரைவான மற்றும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பல்நெறி முறை அடுக்கு மாற்றச் செயல்முறை/இணைய நெறிமுறை (IP/MPLS) திசைவி (தரவு மாற்றி-ரௌட்டர்) ஆனது பெங்களூரூ நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது வினாடிக்கு 2.4 டெராபிட்கள் (TBPS) என்ற அளவு திறனில் மையத் தரவு மாற்றியைப் பாதுகாக்கிறது.
MPLS என்பது வலையமைப்பு முகவரிகளுக்குப் பதிலாக அடுக்குகள் (labels) அடிப்படையில் தரவுகளை ஒரு முனையத்திலிந்து அடுத்த முனையத்திற்குப் பரிமாற்றுகின்ற தொலைத்தொடர்பு வலையமைப்புகளில் உள்ள ஒரு தரவு மாற்றி நுட்பமாகும்.
MPLS (Multiprotocol Label Switching) என்ற நுட்பம் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப் பட்டது.
இதன் முக்கியச் செயல்பாடானது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட வலையமைப்புப் பாதைகளில் இலக்க உறைத் தரவுகளை அனுப்பச் செய்வதன் மூலம் வலையமைப்பு இணைப்புகளை விரைவுபடுத்துவது ஆகும்.