TNPSC Thervupettagam

இந்தியாவின் வேகமான உள்நாட்டு IP/MPLS ரவுட்டர்

April 5 , 2024 105 days 215 0
  • இந்தியாவின் விரைவான மற்றும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பல்நெறி முறை அடுக்கு மாற்றச் செயல்முறை/இணைய நெறிமுறை (IP/MPLS) திசைவி (தரவு மாற்றி-ரௌட்டர்) ஆனது பெங்களூரூ நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது வினாடிக்கு 2.4 டெராபிட்கள் (TBPS) என்ற அளவு திறனில் மையத் தரவு மாற்றியைப் பாதுகாக்கிறது.
  • MPLS என்பது வலையமைப்பு முகவரிகளுக்குப் பதிலாக அடுக்குகள் (labels) அடிப்படையில் தரவுகளை ஒரு முனையத்திலிந்து அடுத்த முனையத்திற்குப் பரிமாற்றுகின்ற தொலைத்தொடர்பு வலையமைப்புகளில் உள்ள ஒரு தரவு மாற்றி நுட்பமாகும்.
  • MPLS (Multiprotocol Label Switching) என்ற நுட்பம் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப் பட்டது.
  • இதன் முக்கியச் செயல்பாடானது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட வலையமைப்புப் பாதைகளில் இலக்க உறைத் தரவுகளை அனுப்பச் செய்வதன் மூலம் வலையமைப்பு இணைப்புகளை விரைவுபடுத்துவது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்