இந்த ஆண்டு இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி அளவானது 2021-22 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 50 பில்லியன் டாலர் என்ற மதிப்பினைக் கடக்கும் வகையில் மேற் கொள்ளப் பட்டு வருகிறது.
பெட்ரோலியம், மின்னணுப் பொருட்கள், தங்கம் மற்றும் நிலக்கரி ஆகியவற்றிற்குப் பிறகு, ஐந்தாவதாக தாவர எண்ணெய்களானவை தற்போது இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பொருளாக உள்ளன.
குறைந்த உள்நாட்டு உற்பத்தி காரணமாக இந்தியா முதன்மையாக நிகரப் பருத்தி இறக்குமதியாளராக மாறியுள்ளது.
மிளகு இறக்குமதியில், வியட்நாம், இலங்கை, இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ள அதே சமயம், ஏலக்காய் உற்பத்தியில் குவாத்திமாலா அதிக சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது.