TNPSC Thervupettagam

இந்தியாவின் ஹைட்ரஜன் திட்டங்களுக்கு உலக வங்கி நிதி உதவி

July 5 , 2024 13 days 102 0
  • இந்தியா அதன் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட ஆற்றல் மேம்பாட்டினை நிறைவேற்ற உதவுவதற்காக இரண்டாவது சுற்று நிதியளிப்பில் 1.5 பில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
  • பசுமை ஹைட்ரஜனுக்கான சந்தையை மேம்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்கவும், குறைவான கார்பன் உமிழ்வு கொண்ட ஆற்றல் முதலீடுகளுக்கான நிதியை அதிகரிக்கவும் இந்த நிதி உதவும்.
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், உலக வங்கியானது முதலாவது குறைவான கார்பன் உமிழ்வு கொண்ட ஆற்றல் திட்ட மேம்பாட்டுக் கொள்கை நடவடிக்கைக்கான முதல் சுற்று நிதியளிப்பில் 1.5 பில்லியன் டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்தது.
  • 2025-26 ஆம் நிதியாண்டில் இருந்து ஆண்டிற்குக் குறைந்தது 450,000 மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் மற்றும் 1.5 ஜிகாவாட் மின்னாற்பகுப்புக் கருவிகள் உற்பத்தி செய்யப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்