TNPSC Thervupettagam

இந்தியாவிற்கான ஆண்டிடை காற்றுத் தர மதிப்பீடு

July 30 , 2024 116 days 186 0
  • ஆற்றல் மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி மையம் (CREA) ஆனது சமீபத்தில், இந்தியாவிற்கான ஆண்டிடை காற்றுத்  தர மதிப்பீட்டினை வெளியிட்டு உள்ளது.
  • அசாம்-மேகாலயா எல்லையில் அமைந்துள்ள மேகாலயாவின் பைர்னிஹாட் நகரம், இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மாசுபட்ட முதல் 10 நகரங்களில், ஹரியானாவில் மூன்று நகரங்களும், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா இரண்டு நகரங்களும், டெல்லி, அசாம் மற்றும் பீகார் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.
  • 163 நகரங்கள் ஆனது, இந்தியாவின் வருடாந்திரத் தேசியக் சுற்றுப்புறக் காற்றுத் தர நிலைகளை (NAAQS) (40 µg/m³) மீறியுள்ளன.
  • அனைத்து 256 நகரங்களும் உலக சுகாதார அமைப்பின் (WHO) இந்த வருடாந்திரத் தர நிலையை (5 µg/m³) மீறியுள்ளன.
  • கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் முறையே 16 மற்றும் 30 நகரங்களுடன் ‘தரமான’ மற்றும் ‘திருப்திகரமான நிலை’ ஆகிய பிரிவுகளின் கீழ் அதிக எண்ணிக்கையிலான நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
  • 'நடுத்தர நிலை' என்ற பிரிவின் கீழ் பீகாரில் அதிக எண்ணிக்கையிலான நகரங்களும் (10), மோசமான நிலை' என்ற பிரிவில் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
  • அசாமில் அமைந்துள்ள ஒரே ஒரு நகரம் மட்டுமே ‘தீவிரமான நிலை’ என்ற பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்