இந்தியாவிற்கான உர வழங்கீட்டில் முன்னணியில் உள்ள நாடு
November 29 , 2022 726 days 353 0
2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில், முதல் முறையாக இந்தியாவிற்கு அதிகளவில் உர வழங்கீடு செய்யும் நாடாக ரஷ்யா மாறியது.
இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு மேற் கொள்ளப் பட்ட உர இறக்குமதி மதிப்பானது 371% உயர்ந்து 2.15 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் இந்தியாவின் இறக்குமதி 765% அதிகரித்து 1.6 பில்லியன் டாலராக இருந்தது.