TNPSC Thervupettagam

இந்தியாவிற்கான கல்வியின் தாக்கத்திலான பத்திரம்

February 13 , 2018 2347 days 781 0
  • இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த ஒரு புதிய 10 மில்லியன் டாலர் மதிப்பிலான வளர்ச்சியின் தாக்கத்திலான பத்திரம் ஒன்றை பிரிட்டனின் இளவரசர் சார்லஸ் வெளியிட்டுள்ளார்.
  • தெற்காசியாவில் நிலவி வரும் வறுமையை ஒழிப்பதற்காக 10 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய வகையைச் சேர்ந்த இப்பத்திரத்தின் சமீபத்திய வெளியீடு பிரிட்டிஷ் ஆசியன் அறக்கட்டளையால் (British Asian Trust) ஏற்படுத்தப்பட்ட சமீபத்திய நிதி திரட்டும் முயற்சியாகும்.
  • பிரிட்டிஷ் ஆசியன் அறக்கட்டளையின் 10ம் ஆண்டு துவக்கவிழாவை கொண்டாட நடத்தப்பட்ட விழாவில் இப்பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த புதிய பத்திரம் இங்கிலாந்தின் சர்வதேச வளர்ச்சிக்கான துறையுடன் (Department for International Development DfID) இணைந்து காமிக் நிவாரண அமைப்பு, மிட்டல் நிறுவனம் மற்றும் யுபிஎஸ் ஆல்டிமஸ் நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பிரிட்டிஷ் ஆசியன் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தப் பத்திரம் தெற்காசியாவில் உள்ள விளிம்பு நிலைச் சமூகத்தில் இருந்து வரும் ஆரம்பப் பள்ளி குழந்தைகளின் எண்ணியல் பயிலும் திறனையும், எழுத்தறிவையும் மேம்படுத்தும் எண்ணத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்