TNPSC Thervupettagam

"இந்தியாவிற்கான முக்கியக் கனிமங்கள்" பட்டியல்

July 4 , 2023 385 days 245 0
  • "இந்தியாவிற்கான முக்கியக் கனிமங்கள்" பற்றிய இந்தியாவின் முதல் அறிக்கை என்பது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • லித்தியம், கோபால்ட், நிக்கல், கிராஃபைட், தகரம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட 30 முக்கிய கனிமங்களை மத்திய அரசு அடையாளம் இதில் கண்டுள்ளது.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கும் அவை மிகவும் இன்றியமையாதவையாகும்.
  • தாதுக்கள் புவியியல் செயல்முறைகளால் உருவாகும் இயற்கைப் பொருட்களாகும்.
  • வெவ்வேறு நாடுகள் அவற்றின் குறிப்பிட்டச் சூழ்நிலைகள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் முக்கியக் கனிமங்களின் ஒரு தனித்துவமானப் பட்டியலைக் கொண்டு உள்ளன.
  • தேசியப் பாதுகாப்பு அல்லது பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் பெரும் பங்கின் அடிப்படையில் 50 கனிமங்களை முக்கியமானவை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • ஜப்பான் தனது பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவை என்று 31 கனிமங்களை அடையாளம் கண்டுள்ளது.
  • ஐக்கியப் பேரரசானது, 18 கனிமங்களை மிகவும் முக்கியமானவை என்றும், ஐரோப்பிய ஒன்றியம் (34) மற்றும் கனடா (31) எனவும் அவற்றை  அடையாளம் கண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்