TNPSC Thervupettagam

இந்தியாவிற்கு அதிகளவில் எண்ணெய் விநியோகம் செய்யும் நாடு

April 25 , 2023 579 days 313 0
  • பிப்ரவரி மாதத்தில், ஒரு பீப்பாய்க்கு 60 டாலர் என்ற மேற்கத்திய நாடுகளின் விலை வரம்பு விதிக்கப்பட்டிருந்த போதிலும், மதிப்பின் அடிப்படையில் இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா திகழ்கிறது.
  • பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மதிப்பு 3.35 பில்லியன் டாலராக இருந்தது.
  • அதைத் தொடர்ந்து 2.30 பில்லியன் டாலர் மதிப்புடன் சவுதி அரேபியா மற்றும் 2.03 பில்லியன் டாலர் மதிப்புடன் ஈராக் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய நாட்டின் எண்ணெய் இறக்குமதியானது 27 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெயினை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்