ஜப்பான் அரசானது, அதன் முக்கிய நுட்பமான இரண்டு ஷின்கன்சென் இரயில்களை சோதனை மற்றும் ஆய்வு நோக்கங்களுக்காக இந்தியாவிற்குப் பரிசளிக்க உள்ளது.
தற்போது கட்டுமானத்தில் உள்ள மும்பை-அகமதாபாத் அதிவிரைவு இரயில் வழித் தடத்தில் சோதனை ஓட்டங்களை மேற்கொள்வதற்காக வேண்டி இந்த இரயில்கள் பயன்படுத்தப் பட உள்ளன.
மும்பை-அகமதாபாத் அதிவிரைவு இரயில் வழித்தடமானது, நிறைவு செய்யப் பட்ட உடன், அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்திலான இந்தியாவின் முதல் அதிவிரைவு இரயில் வழித்தடமாக இருக்கும்.
இந்த அதிவிரைவு இரயில் வழித்தடமானது புல்லட் ரயில் என்றும் அழைக்கப்படும்.