TNPSC Thervupettagam

இந்தியாவிற்கும் கனடா இடையிலான இருதரப்பு உறவுகள்

September 26 , 2023 427 days 252 0
  • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது.
  • அவர் காலிஸ்தான் சார்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய அரசாங்கத்தினால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
  • காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் ஆனது காலிஸ்தான் என்ற ஒரு சுதந்திர சீக்கிய அரசை நிறுவ முற்படும் ஒரு பிரிவினைவாத இயக்கமாகும்.
  • இந்த இயக்கமானது முதன்மையாக சீக்கியப் புலம்பெயர்ந்த நபர்களினால், குறிப்பாக கனடா போன்ற நாடுகளில் வாழும் மக்களிடையே 1980 ஆம் ஆண்டுகளில் தோன்றியது.
  • அப்பிரிவினர் 1982 ஆம் ஆண்டில் வான்குவார் எனுமிடத்தில் ‘காலிஸ்தான் புகலிட அரசு அலுவலகத்தை நிறுவினர்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டினர் அந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 4% ஆக உள்ளனர்.
  • தற்போதைய கீழவையில் மூன்று அமைச்சரவைக்குழு அமைச்சர்கள் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்