TNPSC Thervupettagam

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான ரயில் பாதைத் திட்டம்

February 9 , 2020 1659 days 535 0
  • இந்தியாவில் உள்ள அகர்தலா (திரிபுரா) – வங்கதேசத்தில் உள்ள அகௌரா ஆகியவற்றிற்கு இடையே 15.6 கி.மீ நீளமுள்ள ரயில் பாதைத் திட்டமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடைய இருக்கின்றது.
  • இந்த ரயில் பாதைகளானது இந்திய ரயில்வே மற்றும் வங்கதேச ரயில்வே ஆகியவற்றிற்கு இடையே இணைப்பை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்க இருக்கின்றன.
  • இந்தத் திட்டமானது 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கதேசப் பிரதமரான ஷேக் ஹசீனாவின் இந்தியப் பயணத்தின் போது தொடங்கப்பட்டது.
  • இந்தியப் பகுதியில் 5.46 கி.மீ நீளம் கொண்ட இந்த ரயில் பாதையை அமைப்பதற்கான செலவை மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது (Ministry of Development of North Eastern Region - DoNER) ஏற்கின்றது.
  • வங்கதேசப் பகுதியில் 10.6 கி.மீ நீளமுள்ள இந்த ரயில் பாதையை அமைப்பதற்கான செலவானது இந்திய அரசின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்