TNPSC Thervupettagam

இந்தியாவிலுள்ள பெண்களுக்குச் சொந்தமான MSME நிறுவனங்கள் 2024

December 19 , 2024 7 days 75 0
  • 2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை, பெண்களுக்குச் சொந்தமான மொத்தம் 2,20,73,675 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் (MSME) உத்யம் பதிவு இணைய தளம் (URP) மற்றும் உத்யம் உதவி வழங்கீட்டு இணைய தளம் (UAP) ஆகிய இணைய தளங்கள் பதிவு செய்துள்ளன.
  • குஜராத் மாநிலத்தில், பெண்களுக்குச் சொந்தமான 9,12,052 MSME நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அதே சமயம் இராஜஸ்தானில் 8,15,207 நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டு ளளன.
  • குஜராத் மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் சுமார் 11,942 பதிவுகள் பதிவாகியுள்ள நிலையில் இது அங்குள்ள மொத்த MSME நிறுவனங்களில் 18.24 சதவிகிதம் ஆகும்.
  • இராஜஸ்தானின் டோங்க் மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்களில் மொத்தம் 7,803 பதிவுகள் பதிவாகியுள்ள நிலையில் இது அங்குள்ள மொத்த MSME எண்ணிக்கையில் 13 சதவிகிதம் ஆகும்.
  • தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொந்தமான 1,926,040 MSME நிறுவனங்கள் உள்ள ஒரு நிலையில் இது மொத்தப் பதிவுகளில் 43% ஆகும்.
  • இந்தப் பட்டியலில் 62% பெண்களுக்குச் சொந்தமான MSME நிறுவனங்களுடன் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்