ICMR-னினால் (Indian Council of Medical Research) மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள இரண்டு வௌவால் இனங்களில் பல்வேறு வகையான கொரானா வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த 2 வௌவால் இனங்கள் கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன.
ஆனால் இந்த கொரானா வைரஸ்கள் மனிதர்களிடையே நோயை ஏற்படுத்தும் என்பதற்கான எந்தவொரு ஆதாரமோ, ஆராய்ச்சியோ இல்லை.
இதற்கு முன்பு கேரளாவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ரொடெபஸ் வௌவால் இனமானது நிபா வைரஸ் பாதிப்பிற்குக் காரணமாக இருந்தது.
வௌவால்கள் சாத்தியமான அளவில் மனித நோய்க் கிருமிகளாக உள்ள பல்வேறு வைரஸ்களுக்கான இயற்கையான இருப்பிடமாகக் கருதப் படுகின்றது.
இந்த ஆய்வானது “மருத்துவ ஆராய்ச்சி” என்ற இந்தியப் பத்திரிக்கையில் வெளியிடப் பட்டுள்ளது.