நாட்டின் பரஸ்பர மதிப்பீடுகளை நடத்துவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக, நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் (FATF) ஒரு குழு இந்தியாவிற்கு வருகை தருகிறது.
FATF குழுவானது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பணமோசடி எதிர்ப்பு மற்றும் தீவிரவாத நிதியளிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை மதிப்பீடு செய்கிறது.
39 உறுப்பினர்களைக் கொண்டுள்ள FATF அமைப்பானது போதைப்பொருள், மனித கடத்தல் மற்றும் பிற குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக சர்வதேச தர நிலைகளை நிர்ணயிக்கிறது.
FATF அமைப்பானது சாம்பல் நிறப் பட்டியல் மற்றும் கருப்பு நிறப் பட்டியல் என இரண்டு வகையான பட்டியல்களைக் கொண்டுள்ளது.
மியான்மர், ஈரான் மற்றும் வடகொரியா ஆகியவை அதன் ‘கருப்பு நிறப் பட்டியலில்’ உள்ளன.