TNPSC Thervupettagam

இந்தியாவில் HCFC நிலை

January 21 , 2025 6 hrs 0 min 20 0
  • 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவானது உற்பத்தியில் ஹைட்ரோ குளோரோ ஃப்ளூரோகார்பன்களை படிப்படியாக நிறுத்தியுள்ளது.
  • இந்த ஒரு படிப்படியான வெளியேற்றம் ஆனது 1987 ஆம் ஆண்டு மாண்ட்ரியல் என்ற நெறிமுறையின் கீழ் உள்ள இலக்குகளின் ஒரு பகுதியாகும்.
  • இந்த சர்வதேச ஒப்பந்தம் ஆனது ஓசோன் சிதைப்புப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • HCFC ஆனது கார்பன், ஹைட்ரஜன், குளோரின் மற்றும் ஃப்ளோரின் ஆகியவற்றால் ஆன இரசாயன சேர்மங்களாகும்.
  • அவை கனமற்ற இரப்பர் பொருள், குளிர்பதனம் மற்றும் காற்றுப் பதனம் தொழில் துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • CFCகள் மற்றும் HCFCகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு தனிமம் ஹைட்ரோஃப்ளூரோகார்பன் (HFC) ஆகும்.
  • அவை பொதுவாக குளிர்பதனம், காற்றுப் பதனம் (AC), கட்டிட வெப்பக்காப்பு, தீ அணைக்கும் அமைப்புகள் மற்றும் தூசிப் படலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
  • 2016 ஆம் ஆண்டில், மாண்ட்ரியல் நெறிமுறையானது, பங்குதாரர் நாடுகள் HFCகளின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த என்று ஒப்புக் கொண்ட கிகாலி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.
  • கிகாலி ஒப்பந்தம் ஆனது வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு 2036 ஆம் ஆண்டிலும், வளரும் நாடுகளுக்கு 2047 ஆம் ஆண்டிலும் HFCகளை படிப்படியாகக் குறைக்க ஒரு இலக்கை நிர்ணயித்தது.
  • இந்தியாவானது 1991 ஆம் ஆண்டில் ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான வியன்னா உடன்படிக்கையில் ஒரு பங்குதாரராக மாறியது என்பதோடு மேலும், 1992 ஆம் ஆண்டில் மாண்ட்ரியல் நெறிமுறையில் கையெழுத்திட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்