TNPSC Thervupettagam

இந்தியாவில் அதிகப் புற்றுநோய் பாதிப்பு விகிதம் பதிவு

November 1 , 2023 424 days 310 0
  • இந்தியாவிலேயே மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட இரண்டாவது மாநிலமாக இருந்தாலும், இந்தியாவில் அதிகப் புற்றுநோய் பாதிப்பு விகிதம் கொண்டதாக மிசோரம் திகழ்கிறது.
  • ஆண்களில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு வயிற்றுப் புற்றுநோயும், பெண்களில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு நுரையீரல் புற்று நோயும் முதன்மைக் காரணமாக உள்ளன.
  • இந்தியாவில் உள்ள ஒன்பது பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் முறையே ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் முதன்மை பாதிப்புகளாக உள்ளன.
  • குழந்தைப் பருவ (0 முதல் 14 வயது வரை) புற்றுநோய்களில், நிணநீர்க் குழியப் புற்று நோய் (ஆண்கள்: 29.2% மற்றும் பெண்கள்: 24.2%) முதன்மைப் பாதிப்பாக உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்புகள் 12.8 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்