TNPSC Thervupettagam

இந்தியாவில் அதிகப்படியான நைட்ரேட்டுகள் – மத்திய நிலத்தடி நீர் வாரியம்

January 4 , 2025 18 days 108 0
  • இந்தியா முழுவதும் 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இது 2017 ஆம் ஆண்டில் 359 மாவட்டங்களாக இருந்தது.
  • 20 சதவீத மாதிரிகளில் நைட்ரேட் இருப்பு ஆனது, லிட்டருக்கு 45 மில்லிகிராம் (மி.கி./லி) என்ற அனுமதிக்கப்பட்ட நைட்ரேட் செறிவிற்கும் அதிகமாக உள்ளன.
  • 9.04 சதவீத மாதிரிகள் பாதுகாப்பான வரம்பிற்கு மேற்பட்ட ப்ளோரைடு அளவைக் கொண்டிருந்தன.
  • 3.55 சதவீத மாதிரிகளில் ஆர்சனிக் மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளன.
  • இராஜஸ்தான், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப் பட்டு உள்ள 40 சதவீத மாதிரிகள் வரம்பினை விட மிக அதிக நைட்ரேட் இருப்பினைக் கொண்டதாக உள்ளன.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் 35.74 சதவீதம், தெலுங்கானா மாநிலத்தில் 27.48 சதவீதம், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 23.5 சதவீதம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 22.58 சதவீதம் மாதிரிகளில் அதிக மாசுபாடு இருந்தது.
  • உத்தரப் பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மிகவும் குறைந்த சதவீதத்திலான மாதிரிகளே அத்தகைய நைட்ரேட் இருப்பினைக் கொண்டு இருப்பதாகப் பதிவாகியுள்ளன.
  • அருணாச்சலப் பிரதேசம், அசாம், கோவா, மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் மிகப் பாதுகாப்பான வரம்புகளுக்குள் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்