2021 ஆம் ஆண்டில், இந்தியாவானது அந்நிய தொகுப்பு முதலீடுகளை அதிகம் பெறும் நாடாக உருவெடுத்துள்ளது.
2020-21 ஆம் நிதி ஆண்டில் பெற்ற நிகர அந்நிய தொகுப்பு முதலீடானது ரூ.2.74 லட்சம் கோடியாகும்.
அந்நிய தொகுப்பு முதலீடு (Foreign Portfolio Investment – FPI) என்பது மற்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் நம் நாட்டில் பாதுகாப்புப் பத்திரங்கள் மற்றும் சொத்துகளை வாங்குவதாகும்.
அந்நிய தொகுப்பு முதலீடு என்பது ஒரு நாட்டில் அமைந்துள்ள ஒரு தனிநபர் (அ) ஒரு நிறுவனமானது மற்றொரு நாட்டில் உள்ள ஒரு வணிகத்தில் முதலீடு செய்வதாகும்.
தொகுப்பு முதலீடானது ஒரு குறுகிய கால நடவடிக்கையாகும் ஆனால் நேரடி முதலீடானது ஒரு நீண்ட கால நடவடிக்கையாகும்.