TNPSC Thervupettagam

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு (FDI) : தற்பொழுது, அடுத்து, அதற்கு அப்பால்

December 2 , 2020 1328 days 564 0
  • இது இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பு மற்றும் எர்னஸ்ட் & யங் நிறுவனம்  ஆகியவற்றினால் வெளியிடப்படும் ஒரு அறிக்கையாகும்.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவானது 2025 ஆம் ஆண்டளவில்  ஒவ்வொரு ஆண்டும் 120-160 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI – Foreign Direct Investment) ஈர்க்கும்.
  • இந்தியாவானது கடந்த பத்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8% என்ற அளவுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மீது 1.8% என்ற அளவில் FDI முதலீட்டு வளர்ச்சியைக் கொண்டுள்ளது.
  • தானியங்கி வாகனங்கள், இரசாயனங்கள் மற்றும் மருந்துகள்  துறையானது அதிக அளவாக 89% என்ற அளவிற்கு FDI முதலீட்டை ஈர்த்துள்ளன.
  • மாநிலங்களின் அடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலமானது அதிக அளவில் FDI  முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக (28%) விளங்குகின்றது.
  • இதற்கு அடுத்து கர்நாடகா (19%), தில்லி (16%), குஜராத் (10%) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்