சிறிய அணு உலை (SMR) தொழில்நுட்பத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்காக என அமெரிக்க எரிசக்தித் துறையானது ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஆனது, அமெரிக்காவின் ‘10CFR810’ என்ற கட்டுப்பாட்டு ஒழுங்கு முறையின் கீழ் உள்ளதோடு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த ஒப்புதலானது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு மதிப்பீடு செய்யப்படும்.
123 ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்திய-அமெரிக்க பொது அணுசக்தி ஒப்பந்தம் ஆனது 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதையப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் புஷ் ஆகியோரிடையே கையெழுத்தானது.
இது இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான பொது அணுசக்தி ஒத்துழைப்பை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
தற்போது, இந்தியாவில் சுமார் 6780 MWe என்ற நிறுவப்பட்டத் திறனுடன் 22 உலைகள் செயல்பாட்டு நிலையில் உள்ளன.