TNPSC Thervupettagam

இந்தியாவில் அழிந்து போன இனங்கள்

July 28 , 2019 1819 days 1792 0
  • கடந்த சில நூற்றாண்டுகளில் இந்தியாவில் 4 வகையான விலங்கு இனங்களும் 18 வகையான தாவர விலங்கினங்களும் அழிந்து போனதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.

விலங்கினங்கள்

  • பாலூட்டி இனங்களில் பின்வருபவை இந்தியாவில் அழிந்துபோன இனங்களாகக் கருதப்படுகின்றன.
    • சிறுத்தை - ஆசியோஸநைக்ஸ் ஜுபாடஸ்
    • சுமத்ரா காண்டாமிருகம் – டைசிரோர்ஹினஸ் சுமத்ரென்சிசி
    • இளஞ்சிவப்பு நிற வாத்து – ரொடோனெஸ்ஸா கேரியோபைலாசெய்
    • இமாலயக் காடை – ஒப்ரைசியா சூப்பர்சிலிலியோஸ்
  • உலகில் 6.49 சதவிகித அனைத்து வகையான விலங்கினங்களையும் இந்திய கொண்டுள்ளது.

தாவரங்கள்

  • 14 பூக்கும் மற்றும் 4 பூக்காத தாவரங்கள் என ஒட்டுமொத்தமாக 18 வகையான தாவரங்கள் இந்தியாவில் மறைந்து போயுள்ளன.
  • அவற்றில் குறிப்பிடத்தக்கவை
    • மணிப்பூரில் உள்ள பன்னம் என்ற ஒரு வகை – லாஸ்ட்டிரியோப்சிஸ் வாட்டி
    • ஒப்ஹியோரிசா வகுப்பைச் சேர்ந்த 3 இனங்கள் (ஒப்ஹியோரிசா புருனோனிஸ், ஒப்ஹியோரிசா கவ்டேட் மற்றும் ஒப்ஹியோரிசா ரேடிகன்)
  • உலகில் உள்ள அனைத்து வகையான தாவர இனங்களில் 11.5 சதவிகிதத்தை  இந்தியா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்