இந்தியாவில் ஆரம்பகால சீமைச் சுண்ணாம்புத் தன்மை உடைய (புவியியல் கால அளவின் ஒரு வயது) சுறாமீன் புதைபடிவங்கள்
December 8 , 2023 356 days 195 0
இந்தியாவின் முதல் ஆரம்பகால சீமைச் சுண்ணாம்புத் தன்மை உடைய சுறாமீனின் புதைபடிவங்கள் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் படுகையில் ஹபூர் பாறை அடுக்கமைவில் கண்டுபிடிக்கப் பட்டன.
இவை சுமார் 115 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை ஆகும்.
இது ஏற்கனவே இருந்த பழைய உயிரினங்கள் காணாமல் போனது பற்றியும் புதிய உயிரினங்களின் தோற்றம் குறித்தும் குறிப்பிடுவதோடு, இது சுறாக்களுக்கு என்று ஒரு உருமாறும் சகாப்தமாகவும் இருந்தது.
தற்போதைய ஆய்வானது இந்தப் புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்துவதோடு, இந்தியாவில் முதல் ஆரம்பகால சீமைச் சுண்ணாம்புத் தன்மை உடைய சுறாக்களின் வரிசையினை வெளியிடுகிறது.