2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவு எண்ணிக்கையிலான கைபேசி இணைய முடக்க நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த ஆண்டு 96 இணைய முடக்கம் பதிவான நிலையில் இந்த ஆண்டு இது வரையில் 60 இணைய முடக்கங்கள் மட்டும் பதிவாகியுள்ளன.
அரசியலமைப்பின் 370வது சரத்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டில் அதிக இணைய முடக்கங்கள் – அதாவது 132 என்ற அளவில் பதிவாகின.
அன்று அரசாங்கம் ஆனது, 2017 ஆம் ஆண்டில் சட்டத்தினைத் திருத்தியமைத்து, 2017 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிக நிறுத்த (பொது அவசரநிலை அல்லது பொதுப் பாதுகாப்பு) விதிகளை பிரகடனப்படுத்தியது.
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆனது, இந்தியத் தந்திச் சட்டத்தின்படி, “பொது அவசரநிலை” அல்லது “பொதுப் பாதுகாப்பு” நலன் கருதி மட்டுமே இணைய முடக்கத்தை விதிக்க முடியும்.