இந்தியாவில் உள்ள குறுகிய கால மின்சார சந்தை குறித்த அறிக்கை 2023-24
March 26 , 2025 7 days 34 0
தமிழ்நாடு மின் விநியோகக் கழக லிமிடெட் (TNPDCL) நிறுவனம் ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் மின்னாற்றல் பரிமாற்றங்களிலிருந்து சுமார் 8,606 மில்லியன் அலகுகள் மின்சாரத்தினை வாங்கியது.
முன்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) என்று அழைக்கப்பட்ட TNPDCL ஆனது 7,953 கோடி ரூபாய் செலவில் மின்சாரத்தை வாங்கியது.
இந்த மின்னாற்றல் பரிமாற்றங்களில், அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தையிலிருந்து (HP-DAM) மின்சாரத்தினை வாங்கும் ஒரு முக்கிய நிறுவனமாக TNPDCL உள்ளது.
இந்தக் கோடை காலத்தில் தமிழ்நாட்டின் மின் தேவையானது, 2024 ஆம் ஆண்டு மே 02, ஆம் தேதியன்று பதிவான அதன் முந்தைய ஆண்டின் அனைத்து நேரத்திலும் இல்லாத மிக உச்சபட்சத் தேவையான 20,830 மெகாவாட்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்று மாநிலத்தின் அதிகபட்சத் தினசரி நுகர்வு 454.32 மில்லியன் அலகுகள் ஆகும்.