உலக வனவிலங்கு நிதியத்தின் 2024 ஆம் ஆண்டு லிவிங் பிளானட் அறிக்கை, வெறும் 50 ஆண்டுகளில் வனவிலங்குகளின் சராசரி எண்ணிக்கையில் சுமார் 73 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டுகிறது.
1992 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், வெண்ணிறக் கழுகு மற்றும் இந்தியக் கழுகுகளின் எண்ணிக்கை முறையே சுமார் 98 சதவீதம் மற்றும் 93 சதவீதம் குறைந்துள்ளது.
இருபது ஆண்டுகளாக 22 நாடுகளில் புல்வெளி வாழ் வண்ணத்துப் பூச்சி இனங்களில் 33 சதவீதம் குறைவு பதிவாகியுள்ளது.
ஒடிசாவில், உள்ளூர் தேனீக்களின் எண்ணிக்கை 2002 ஆம் ஆண்டு முதல் 80% குறைந்து உள்ளது.
நீலகண்டப் பறவை அல்லது இந்தியப் பனங்காடைகளின் எண்ணிக்கையில் 35% சரிவு காணப் படுகிறது.