TNPSC Thervupettagam

இந்தியாவில் உள்ள மிகவும் மாசுபட்ட நகரங்கள்

January 25 , 2020 1769 days 821 0
  • ஜார்க்கண்ட் மாநில நகரமான ஜாரியா ஆனது இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாகும். அதைத் தொடர்ந்து அதே மாநிலத்தைச் சேர்ந்த தன்பாத் ஆனது மாசுபட்ட நகரமாக உள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரட்டை நகரங்களான ஜாரியா மற்றும் தன்பாத் ஆகியவற்றில் நிலக்கரிச்  சுரங்கப் பகுதிகள் அதிகம் உள்ளன.
  • இந்த அறிக்கையின் படி, நாட்டின் மிகவும் மாசுபட்ட பத்து நகரங்களில் ஆறு நகரங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளன (நொய்டா, பரேலி, காசியாபாத், பிரயாக்ராஜ், பெரோசாபாத் மற்றும் மொராதாபாத்).
  • மிசோரம் மாநிலத்தின் லுங்லே நகரமானது மிகக் குறைவான மாசுபட்ட நகரமாகும். மேலும் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைக்கப்பட்ட மட்டத்திற்கும் குறைவான அளவிலான நுண்மத் துகள்களைக்  கொண்டுள்ள, இந்தியாவின் ஒரே நகரம் இதுவாகும்.
  • அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்பான “க்ரீன்பீஸ் அமைப்பின்” நான்காவது ஏர்போகாலிப்ஸ் என்ற அறிக்கையின்படி இந்த விவரங்கள் அறியப் பட்டுள்ளன.
  • மத்திய அரசானது 2017 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு தேசிய தூய்மையான காற்று என்ற ஒரு திட்டத்தை 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
  • இது எளிதில் அணுக முடியாத 102 நகரங்களில் 2024 ஆம் ஆண்டில் நுண்மத் துகள்கள் - 10 மற்றும் நுண்மத் துகள்கள் - 2.5 ஆகியவற்றின் செறிவுகளை 30% வரை குறைக்கும் இலக்கைக் கொண்ட ஒரு ஐந்தாண்டு செயல் திட்டமாகும்.
  • க்ரீன்பீஸ் அமைப்பானது 1971 ஆம் ஆண்டில் கனடாவின் வான்கூவரில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடமானது  நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் உள்ளது.
  • இந்தியாவில், இந்த அமைப்பின் தலைமையகமானது பெங்களூரில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்