TNPSC Thervupettagam

இந்தியாவில் ஊதிய அறிக்கை: ஒரு வேலை வாய்ப்புக் கண்ணோட்டம்

July 7 , 2024 139 days 189 0
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மொத்தப் புதிய சந்தா தாரர்களின் சேர்க்கையில் 4 சதவிகிதம் சரிவைக் கண்டது.
  • முந்தைய ஆண்டை விட 2023-24 ஆம் ஆண்டில் மொத்த எண்ணிக்கை 1.09 கோடியாகக் குறைந்து உள்ளது.
  • EPFO அமைப்பு 2022-23 ஆம் ஆண்டில் 1,14,98,453 ஆக இருந்த புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு குறைந்து 2023-24 ஆம் ஆண்டில் 1,09,93,119 உறுப்பினர்களை மட்டுமே சேர்த்து உள்ளது.
  • 2023-24 வரையிலான கடந்த ஐந்து நிதியாண்டுகளில், புதிய EPFO ​​உறுப்பினர்களின் மொத்தச் சேர்க்கையானது 2018-19 ஆம் ஆண்டில் காணப்பட்ட தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை.
  • அந்த ஆண்டில், மொத்த புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,39,44,349 ஆகும்.
  • ஆனால், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முந்தைய நிதியாண்டில் 8,24,735 ஆக இருந்த புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 9,37,020 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்