அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியன ஒரு புதியக் கட்டமைப்பை அறிமுகப் படுத்துவதாக அறிவித்துள்ளன.
இது இந்தியாவில் எண்ணிம உள்கட்டமைப்பிற்கான ஆதரவுகளை வழங்குவதற்காக இந்தியத் தனியார் துறை நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை அதிகப்படுத்துகிறது.
இந்தியத் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து DFC, JBIC மற்றும் கொரியா Eximbank ஆகிய நிறுவனங்களின் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையை DiGi என்ற கட்டமைப்பு உருவாக்குகிறது.
இந்தியாவில் உத்தி சார் எண்ணிம உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான ஆதரவை இது வழங்கும்.