வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, சமீபத்தில் இந்தியாவில் கடத்தல் 2024 என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்டது.
2023-24 ஆம் ஆண்டில் வான்வெளி வழியான கொக்கைன் கடத்தல் தொடர்பாக சுமார் 47 வழக்குகளை இந்த முகமை பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு முந்தையதொரு ஆண்டில் 21 வழக்குகள் பதிவாகியுள்ளன.
2023-24 ஆம் ஆண்டில் சுமார் 1,319 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது, அதற்கு முந்தைய ஆண்டில் 600 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
2022-2023 ஆம் ஆண்டில் 481 கோடி ரூபாய் மதிப்பிலான FTA முறைகேடு வழக்குகள் பதிவாகியுள்ளது என்பதோடு இதனுடன் ஒப்பிடும் போது 2023-24 ஆம் ஆண்டில் 1,427 கோடி ரூபாய் மதிப்பிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய மரண பிறைநிலவுப் பகுதி எனப்படுகின்ற இந்தப் பகுதியானது, இந்தியாவிற்குள் ஹெராயின் கடத்தலின் முதன்மை ஆதாரமாக உள்ளது.
மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை உள்ளடக்கிய மரண முக்கோணம் எனப் படும் இந்தப் பகுதியானது செயற்கை மருந்துகள் மற்றும் ஹெராயின் ஆகியவற்றின் கடத்தலுக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது.