புது டெல்லியில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் (CSIR) மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் மேம்படுத்தப்பட்ட மரபணு மாற்ற முறையை உருவாக்கியுள்ளனர்.
இது தற்போதுள்ள CRISPR-அடிப்படையிலான தொழில்நுட்பங்களைக் காட்டிலும் அந்த டிஎன்ஏவை மிகவும் துல்லியமாகவும் திறமையாகவும் மாற்றியமைக்கக் கூடியது.
ஃபிரான்சிசெல்லா நோவிசிடா பாக்டீரியாவிலிருந்து cas9 (நொதி) என்சைம்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
FnCas9 என அழைக்கப்படும் இந்த Cas9, மிகவும் துல்லியமானது என்றாலும், இது மிகவும் குறைந்த செயல்திறன் கொண்டது.
FnCas9 நொதிகளை, அதன் தனித்தன்மையை இழக்கச் செய்யாத வகையில் மிக நன்கு மேம்படுத்துவதற்காக வேண்டி அதன் புதிய வடிவங்கள் மாற்றியமைக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, CRISPR-Cas9 நுட்பத்தினைப் பயன்படுத்தி, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் மரபணுவில் குறிப்பிட்ட DNA வரிசைகளைச் சேர்க்கலாம், அகற்றலாம் அல்லது மாற்றியமைக்கலாம்.