2023-24 ஆம் நிதியாண்டில் ஏற்றுமதி 1.29 பில்லியன் டாலர் மதிப்பினை எட்டியுள்ள நிலையில், உலகின் ஏழாவது பெரிய காபி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்து உள்ளது.
இது 2020-21 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 719.42 மில்லியன் டாலர் மதிப்பினை விட சுமார் இரு மடங்கு அதிகமாகும்.
உள்நாட்டு நுகர்வு ஆனது 2012 ஆம் ஆண்டில் 84,000 டன்னாக இருந்தது என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டில் 91,000 டன்னாக அதிகரித்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் 248,020 மில்லியன் டன் பங்குடன் காபி உற்பத்தியில் கர்நாடகா முன்னணியில் உள்ள ஒரு நிலையில் அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை இடம் பெற்றுள்ளன.