TNPSC Thervupettagam

இந்தியாவில் காரீய நச்சின் தாக்கம்

October 18 , 2022 642 days 346 0
  • நிதி ஆயோக் மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையானது இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே காரீய நச்சுத்தன்மையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையினை எடுத்துக் காட்டுகிறது.
  • காரீய நச்சுத்தன்மையினால் ஏற்படும் அதிக சுகாதாரம் மற்றும் பொருளாதாரச் சுமை இந்தியாவில் பதிவாகியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் அறிக்கையானது, உலகம் முழுவதும் காரீய நச்சுத்தன்மையினால் பாதிக்கப்பட்ட மொத்த 800 மில்லியன் குழந்தைகளில் 275,561,163 பேர் இந்தியாவில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
  • அதாவது இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் காரீய நச்சுத்தன்மையினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • இது நாட்டில் 2.3 லட்சம் அளவிலான முன்கூட்டிய மரணங்களுக்கும் வழி வகுத்தது.
  • பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை இந்திய மாநிலங்களில் சராசரியாக இரத்தத்தில் அதிக காரீயக் கலப்பு அளவை (BLL) கொண்டிருப்பதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • இது அதிக சராசரி இரத்தத்தில் அதிக காரீயக் கலப்பு அளவைக் கொண்ட மொத்த இந்திய மக்கள்தொகையில் 40% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்