இந்தியாவில் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுகளானது கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக வெகுவான அளவில் மிகக் குறைந்த அளவிற்குச் சரிந்துள்ளது.
இந்த ஆய்வானது ஆற்றல் மற்றும் தூய்மைக் காற்றிற்கான ஆராய்ச்சி மையத்தினால் மேற்கொள்ளப் பட்டது.
இது மார்ச் மாதத்தில் 15% என்ற அளவிலும் ஏப்ரல் மாதத்தில் 30% என்ற அளவிலும் குறைந்துள்ளது.
நிலக்கரியின் மூலம் உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததன் காரணமாக கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வானது வெகுவாக குறைந்துள்ளது.
மின்சாரப் பயன்பாட்டின் வீழ்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையிடமிருந்து வரும் போட்டி ஆகியவை கோவிட் – 19 நோய்ப் பாதிப்பிற்கு முன்பே புதைபடிவ எரிபொருள்களுக்கான தேவையைச் சரிவடையச் செய்துள்ளது.