இந்தியாவில் காற்று மாசுபாடானது கடந்த 20 ஆண்டுகளை விடக் குறைவாக பதிவாகியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
நாசாவினால் வெளியிடப்பட்ட தரவின் படி, 2020 ஆம் ஆண்டின் கண்ணுக்குப் புலப்படும் தூசுப் படலத்தின் ஆழமானது (AOD - Aerosol Optical Depth) 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான AOD-ன் சராசரியுடன் ஒப்பிடப் படும் பொழுது மிகக் குறைந்ததாக உள்ளது.
AOD என்பது வளிமண்டலத்தில் உள்ள காற்றுத் துகள்களினால் ஈர்க்கப்படும் ஒளியாகும்.
காற்றுப் படலம் என்பது மனிதர்களின் நடவடிக்கைகளின் காரணமாக வெளியிடப் படும் வளிமண்டலத்தில் உள்ள துகள்களாகும்.
AOD என்பது வளிமண்டலத்தில் இருக்கும் காற்றுப் படலத்தின் அளவுகளை அளவிடும் ஒரு அளவீட்டு நடவடிக்கையாகும்.
இது வளிமண்டலத்திற்குள் ஒளி செல்லும் போது, ஒளி சென்றடைந்த இடத்தை அளவிடுவதாகும்.
AOD அதிகரித்தால், ஒளியின் அழிவு விகிதமானது அதிகரிக்கும்.