TNPSC Thervupettagam

இந்தியாவில் குளோரிபைரிஃபோஸ் பயன்பாடு

April 29 , 2025 13 hrs 0 min 18 0
  • பேசல், ரோட்டர்டாம் மற்றும் ஸ்டாக்ஹோம் உடன்படிக்கைகளுக்கான (BRS COP) பங்கு தாரர்களின் மாநாடு ஆனது ஜெனீவா நகரில் நடத்தப் பட்டது.
  • ஸ்டாக்ஹோம் உடன்படிக்கையின் மீதான தரப்பினரை உலகளாவியப் பயன்பாட்டுத் தடைக்கு அழைப்பு விடுக்கச் செய்யும் A என்ற முக்கியப் பின்ணிணைப்பின் கீழ் குளோரிபைரிஃபோக்களைப் பட்டியலிடுமாறு இந்தியா வலியுறுத்தியது.
  • குளோரிபைரிஃபோஸ் என்பது, சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டிற்குத் தடைகள் இருந்த போதிலும், இந்தியாவில் இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியாகும்.
  • இது உலக சுகாதார அமைப்பினால் 'மிதமான ஒரு ஆபத்து கொண்டது' என வகைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இது இந்தியாவில் பல்வேறு பயிர்களில் தொடர்ந்து பயன்படுத்தப் படுவதால், இது விவசாயிகள், நுகர்வோர், எதிர்காலச் சந்ததியினர் மற்றும் சுற்றுச்சூழல்களுக்கு மிக கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
  • 2001 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸ்டாக்ஹோம் உடன்படிக்கையானது, கரிம மாசுபடுத்திகளின் தொடர்ச்சியான பயன்பாட்டினை நீக்குவதை அல்லது மிக நன்கு கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்