TNPSC Thervupettagam

இந்தியாவில் குழந்தை கடத்தல்

July 31 , 2023 357 days 253 0
  • ‘இந்தியாவில் குழந்தை கடத்தல்: சூழ்நிலை தரவுப் பகுப்பாய்வு மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த நடவடிக்கை உத்திகளின் தேவை’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கை சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • கேம்ஸ்24x7 என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்தப் புதிய கணக்கெடுப்பினை மேற்கொண்டன.
  • 2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் கடத்தல் பதிவான முதல் மூன்று மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியனவாகும்.
  • கோவிட் 19 பெருந்தொற்றிற்கு முந்தைய மற்றும் பிந்தையக் காலங்களில் டெல்லியில் பதிவான குழந்தை கடத்தல் வழக்குகளில் 68 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • கோவிட் 19 பெருந்தொற்றிற்கு முந்தையக் காலக் கட்டத்தில் (2016-2019) இதில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 267 ஆகும்.
  • ஆனால் அது கோவிட் 19 பெருந்தொற்றிற்கு பிந்தையக் காலக் கட்டத்தில் (2021-2022) 1214 ஆக உயர்ந்தது.
  • கர்நாடகாவில் 6 ஆக இருந்த குழந்தை கடத்தல் வழக்குகள் 18 மடங்கு அதிகரித்து 110 ஆக அதிகரித்துள்ளது.
  • குழந்தைகள் கடத்தல் வழக்குகளில் ஜெய்ப்பூர் நகரம் முதலிடத்தில் உள்ள நிலையில், டெல்லியின் மற்ற நான்கு மாவட்டங்கள் முதல் இடங்களில் உள்ளன.
  • இந்த காலக் கட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 13,549 குழந்தைகள் இந்த கடத்தலில் இருந்து மீட்கப் பட்டனர்.
  • உணவு விடுதிகள் மற்றும் தாபாக்கள் ஆகியவற்றில் அதிகபட்ச எண்ணிக்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் (15.6 சதவீதம்) பணியமர்த்தப் படுகின்றனர்.
  • அதைத் தொடர்ந்து வாகன உற்பத்தி அல்லது போக்குவரத்துத் துறை (13 சதவீதம்), மற்றும் ஆடைகள் (11.18 சதவீதம்) ஆகிய துறைகளில் பணியமர்த்தப் படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்