TNPSC Thervupettagam

இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று கால கொள்முதல்: சவால்கள், புத்தாக்கங்கள் மற்றும் அதன் மூலம் கற்ற பாடங்கள்

September 7 , 2022 685 days 324 0
  • இது உலக வங்கியினால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையாகும்.
  • இதில், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியா மேற்கொண்ட பயனுள்ளச் செயல்பாடுகளை உலக வங்கி பாராட்டுகிறது.
  • நாட்டில் பொது சுகாதார அவசரநிலையின் போது ஏற்றுமதி மீதான ஆரம்பகாலக் கட்டுப்பாடுகள் அதற்குச் சாதகமாக செயல்பட்டன.
  • மையப்படுத்தப்பட்டக் கொள்முதல், நீண்ட காலச் சந்தை மேம்பாட்டிற்கான ஆதரவு மற்றும் அவசர மருத்துவ உபகரணங்களின் (EME) உற்பத்தி போன்ற இந்திய அரசாங்கத்தின் முடிவை உலக வங்கி அங்கீகரித்தது.
  • ஒரு வலுவான அமைச்சகங்களுக்கு இடையேயான அமைப்புகளை உருவாக்கியதன் மூலம், மாநிலங்களுக்கு உதவுவதற்காக வேண்டி ஒரு மையப்படுத்தப்பட்ட கொள்முதல் முறையைக் கொண்டு வருவது குறித்து விரைவாக முடிவெடுக்க அரசாங்கத்திற்கு உதவியது.
  • "கோவிட்-19 அவசரகாலச் செயல்பாடு மற்றும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு" உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியவை இணைந்து 1.5 பில்லியன் டாலர் தொகையை நிதியளித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்