TNPSC Thervupettagam

இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதி குறைவு

April 10 , 2020 1694 days 623 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதியானது  32.44% என்ற அளவில் குறைந்துள்ளது.
  • உலகில் சமையல் எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா கோவிட் – 19 தொற்றின் காரணமாக தனது இறக்குமதியைக் குறைத்து உள்ளது.
  • இந்தியா, தனது குடிமக்களுக்கு 60% அளவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட  சமையல் எண்ணெய்யை வழங்கி வருகின்றது.
  • இந்தியா பனை எண்ணெயை இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கின்றது. 
  • இந்தியா சோயா அவரை எண்ணெய்யை அர்ஜென்டினா நாட்டிடமிருந்தும் சூரிய காந்தி எண்ணெய்யை உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடமிருந்தும் இறக்குமதி செய்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்