2018-2022 ஆம் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 7.77 லட்சத்திற்கும் அதிகமான உயிர் இழப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,68,491 ஆக இருந்தது.
இது 2021 ஆம் ஆண்டில் பதிவான 1,53,972 என்ற எண்ணிக்கையிலிருந்து குறிப்பிடத் தக்க அளவில் அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் மட்டும் 22,595 உயிரிழப்புகளுடன் உத்தரப் பிரதேசம் ஆனது, அதிக சாலை விபத்துகள் பதிவான மாநிலமாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் 17,884 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு மாநிலமும், 15,224 உயிரிழப்புகளுடன் அடுத்த இடத்தில் மகாராஷ்டிராவும் இடம் பெற்றுள்ளன.
2020 ஆம் ஆண்டு முதல் 36,700 கோடி ரூபாய் மதிப்பிலான 23 கோடிக்கும் அதிகமான மின்னணு அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.