TNPSC Thervupettagam

இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை தினம் - டிசம்பர் 18

December 20 , 2023 213 days 167 0
  • பல்வேறு சிறுபான்மையினர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க உதவுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறுபான்மையினர் உரிமைகள் தினமானது 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி அன்று நிறுவப்பட்டது.
  • இந்நாளில், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்தச் செய்வதற்கும் வேண்டி தேசியம் அல்லது இனம், மதம் மற்றும் மொழிசார் சிறுபான்மையினரைச் சேர்ந்த நபர்களின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதன் ஒரு பகுதியாக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தை (NCM) இந்தியா நிறுவியது.
  • தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின் (1992) கீழ் மத்திய அரசு தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தினை நிறுவியது.
  • இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜோராஸ்ட்ரியர்கள் (பார்சிகள்) மற்றும் சமணர்களை சிறுபான்மை சமூகங்களாக அரசாங்கம் அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'பன்முகத் தன்மை மற்றும் உள்ளடக்கத்தைக் கொண்டாடுதல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்