TNPSC Thervupettagam

இந்தியாவில் சுடர்க்கரி நீக்கல் முறை போக்குவரத்து

June 25 , 2020 1618 days 601 0
  • நிதி ஆயோக் ஆனது இந்தியாவில் சுடர்க்கரி நீக்கல் முறை போக்குவரத்துத் திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது சர்வதேசப் போக்குவரத்து மன்றத்துடன் (ITF - International Transport Forum) இணைந்து மேற்கொள்ளப் படுகின்றது.
  • இது நாட்டில் போக்குவரத்தின் காரணமாக ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைடின்  உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் சுடர்க்கரி நீக்கல் முறை போக்குவரத்து முன்னெடுப்பானது DTEE  (Decarbonising Transport in Emerging Economies) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • DTEE என்பது வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் சுடர்க்கரி நீக்கல் முறை போக்குவரத்து என்பதைக் குறிக்கின்றது.
  • DTEE என்பது அர்ஜென்டினா, மொராக்கோ, மற்றும் அசர்பைஜான் ஆகிய பங்கேற்பாளர்களைக் கொண்ட ITFன் ஒரு திட்டமாகும்.
  • ITF என்பது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்புடன் உள்ள அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்